கேரள மாநிலம்கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் (வ.எண்.16824) கொல்லத்தில் இருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
தொடர்ந்து, மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16823) சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 3.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.
இதற்கிடையில் ரயில்களின் வேகம் கடந்த மாதம் ஏழாம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டது.
மேலும் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்கப்பட உள்ளது.
இதனால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு அட்டவணை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்டோபர் 1-ந் தேதி முதல் கொல்லத்தில் இருந்து இந்த ரெயில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5.24 மணிக்கு நாகர்கோவில் டவுனுக்கும், இரவு 7 மணிக்கு நெல்லைக்கும், இரவு 8.50 மணிக்கு விருதுநகருக்கும், இரவு 9.10 மணிக்கு திருமங்கலத்துக்கும், இரவு 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்துக்கும் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 6.05 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
பின்னர் மறு மார்க்கமாக சென்னையில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 3.20 மணிக்கு மதுரைக்கும், நள்ளிரவு 3.44 மணிக்கு திருமங்கலத்துக்கும், 4.10 மணிக்கு விருதுநகருக்கும், காலை 6.05 மணிக்கு நெல்லைக்கும், காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கும் வந்தடைகிறது. நண்பகல் 11.15 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இது மட்டும் இன்றி ரயிலில் நம்பரும் கொல்லம்-சென்னை ரெயில் வண்டி எண் 16824-க்கு பதிலாக வண்டி எண் 20636 ஆகவும், சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 16823-க்கு பதிலாக வண்டி எண் 20635 எனவும் மாற்றப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“