முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அன்பகம் கலை தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் நீண்டகால நண்பரும், அவருடைய நம்பிக்கைக்குரியவருமான அன்பகம் கலையை, முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யான ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலாக அமைப்புச் செயலாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தி.மு.க செயற்குழு உறுப்பினராக இருந்தார். அன்பகம் கலை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து தி.மு.க-வில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், தி.மு.க-வில் குறைந்தது அரை டஜன் புதிய முகங்கள் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க-வில் உள்ள 72 மாவட்டங்களில் 65 மாவட்டச் செயலாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரை டஜன் மாவட்டங்களில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க-வில் அதிகாரம் மிக்க பதவியான மாவட்டச் செயலாளர் பதவியில் புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதில் சீனியர் அமைச்சர்கள், சீனியர் தலைவர்களுக்கு விருப்பமில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்பசேகரனுக்குப் பதிலாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், முன்னாள் அ.ம.மு.க தலைவராக இருந்தவர் தற்போது அறிவாலயத்தின் விசுவாசியாக உள்ள பழனியப்பன், தி.மு.க-வில் தர்மபுரி மேற்குக் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"