New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/anbarasu-final.jpg)
R.Anbarasu Death News: மகளின் சந்தேகம் அரசியல் வட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்திய முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ர.அன்பரசு-வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மகள் சுமதி அன்பரசு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து, அன்பரசு-வின் உடலை கீழ்பாக்கம் மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு போலீஸ் அனுப்பி வைத்தது.
பூனமல்லியில் உள்ள குமனஞ்சாவடியில் இருப்பிடமாக கொண்டவர் அன்பரசு, 1980 ல் செங்கல்பேட்டை தொகுதியிலிருந்து மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
அன்பரசு ராஜீவ் காந்தி நினைவு தொண்டு அறக்கட்டளையின் தலைவராக இருந்தபோது, ஒரு தனியார் பினான்சியரிடம் இருந்து லட்சம் கடனாகப் பெற்றார் . அந்த கடன் திருப்பிக் கொடுக்கஅவர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இந்த வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்ற அளித்த உத்தரவை உறுதிசெய்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
மகளின் சந்தேகம் அரசியல் வட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.