Advertisment

அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதே நமது கடமை; ஆளுநருக்கு பாடம் எடுத்த அன்பில் மகேஷ்!

அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்; ஆளுநருக்கு பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

author-image
WebDesk
New Update
anbil governor rn ravi

கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளிக்குச் சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சரஸ்வதி படத்தை மேஜையில் வைத்து படித்தால் மாணவர்களின் அறிவு வளரும் என மாணவர்கள் மத்தியில் பேசி உள்ளார்.

Advertisment

இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பதிவில் அரசியலமைப்பு சட்டத்தின் வரையறையை ஆளுநருக்கு எடுத்துச் சொல்லி உள்ளார்.

"அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் “It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform (அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்)" என வரையறுத்துள்ளார். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்" என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் இந்திய குடிமகனின் கடமையை எக்ஸ் பதிவில் எடுத்துரைத்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Anbil Mahesh Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment