scorecardresearch

ஸ்டாலின் 4-ம் தேதி திருச்சி வருகை: வரவேற்பு ஏற்பாடுகள் பற்றி அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை

முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி வருகை குறித்து தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

MK Stalin visit Tiruchi on November 4th, Anbil Mahesh, Anbil Mahesh discussion meeting, Tamil news, Latest tamil news, Trichy news, Trichy, Tamil nadu news, ஸ்டாலின் திருச்சி வருகை, அன்பில் மகேஷ் ஆலோசனைக் கூட்டம், நம்பவர் 4 ஸ்டாலின் வருகை, திருச்சி செய்திகள், தமிழ் செய்திகள், திருச்சி, Tiruchi district, Tamilnadu news

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி பகுதியில் உள்ள காகித தொழிற்சாலையில் இரண்டாவது அலகை பார்வையிடவும், திருச்சி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் வரும் நாலாம் தேதி திருச்சி வருகிறார்.

முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி வருகை குறித்து தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 28.10.2022 மாலை 6 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் நவம்பர் 4ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் கழகத் தலைவர் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் நவம்பர் 6-ம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாநகர கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் கொய்யாமொழி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி: க. சண்முக வடிவேல் – திருச்சி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anbil mahesh discussion meeting about mk stalin visit to tiruchirappalli

Best of Express