Advertisment

பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக் கழிக்க வேண்டாம்; அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் – அன்பில் மகேஷ்

பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம்; நீங்கள் போகும் போது நீங்கள் வகுத்துத் தந்த பாதைகள், கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமைச்சர் உதயநிதி இருக்கிறார்; சேலம் மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

author-image
WebDesk
New Update
Anbil Mahesh salem DMK

சேலம் மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதல்வர் ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது. பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம் என தி.மு.க இளைஞரணி மாநில மாநாட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisment

2 ஆவது தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், தி.மு.க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் ‘தமிழ்நாட்டின் கல்வி புரட்சி’ என்ற தலைப்பில் பேசினார், "இந்த மாநாட்டை மாநில உரிமை மீட்பு முழக்கம் என்று சொன்னவர் நமது தலைவர். மீட்பு என்றால் ஏதோ அடமானம் என்று அர்த்தம் வரும் என்கிறார்கள். உண்மைதான். கடந்த அடிமை அ.தி.மு.க ஆட்சியில் மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோனது. அதை மீட்டெடுக்க நடைபெறும் மாநாடு தான் இந்த மாநாடு. நமது மாநில உரிமைகள் பறிபோனதால் தங்கை அனிதா தொடங்கி பலர் தங்கள் உயிரைக் கல்விக்காக நீர்த்துள்ளனர். அந்த மாணவியின் பெயரில் இந்த மாநாட்டின் நுழைவாயில் உள்ளது. இனி இதுபோல ஒரு நுழைவாயில் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே உதயநிதி போராடி வருகிறார்.

நான்கு பேர் மட்டும் நல்லா இருந்தால் போதும் எனச் சட்டம் உருவாக்குபவர்கள் சாதாரண தலைவர்கள். நான்கு பேர் இணைந்தால் இந்த நாடே நல்லா இருக்கும் என்று மாற்றியவர்கள் நீதிக்கட்சி தலைவர்கள். அந்த நீதிக்கட்சி தலைவர்களின் வழித்தோன்றல்கள்தான் இங்குள்ளவர்கள். தமிழக முதல்வரை வாழும் நீதிக்கட்சி தலைவர் என்றே சொல்லலாம். கொரோனா காலத்திற்குப் பிறகு, மாணவர்கள் எதிர்காலம் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தை இப்போது உலகமே பாராட்டி வருகிறது.

பள்ளிக்கூடம் செல்லாதவர்களுக்கும் கல்வி அறிவை ஏற்படுத்த பல திட்டங்களைக் கொண்டு வருகிறோம். அதேபோல பசியோடு மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இன்றைக்கு நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் திராவிட மாடல் ஆட்சியை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியப்படுகின்றன. மக்களுக்கு நாம் வழங்கப்படக் கூடிய நலத்திட்டங்கள், சலுகைகளை பார்த்து, பிற மாநிலங்களும் அதை செயல்படுத்துகின்றன. நீதிக்கட்சி தலைவர்கள் செய்ததை தொடர்ந்து செய்பவர் தான் நமது முதல்வர்.

இன்று மத்திய அரசில் இருப்பவர்கள், இந்த சாதியைச் சேர்ந்தவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்துள்ளேன் என்கிறார்கள். ஒரு சாதியில் ஏதோ ஒருவருக்குப் பொறுப்பைத் தந்துவிட்டு நீங்கள் பேசுகிறார்கள். ஆனால், அந்த ஒட்டுமொத்த சாதிக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தவர் கருணாநிதி. உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2050க்குள் 50% அடைய வேண்டும் என்கிறது மத்திய அரசு. ஆனால், அந்த இலக்கை நாம் அடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு காரணம் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் தான்.

நீங்கள் படித்தால் மட்டும் போதும், மற்ற அனைத்தையும் அரசு பார்த்துக்கொள்ளும் என்று சொன்னவர்கள் தான் நாம். ஆனால், மத்திய அரசோ, தமிழகத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட அம்சங்களுடன், நமக்கு ஒவ்வாத சில அம்சங்களையும் சேர்த்து புதிய கல்விக்கொள்கை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கள் மாநிலத்திற்கு என்ன வேண்டும் என்பது நமக்கு தெரியும், நமது முதல்வர் அதை எதிர்க்கிறார். மக்கள் பிரதிநிதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக முதல்வர் இருக்கிறார்.

அதேநேரம் மக்கள் மூலம் பதவிக்கு வந்த மத்திய அரசு ஆட்சியாளர்கள் ஆடாத ஆட்டம் ஆடுகிறார்கள். அவர்களுக்குப் பதிலடியை வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். இதை இந்தியா கூட்டணியை வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலின் படைப்பார். இந்தியா கூட்டணியில் நீங்கள் கைகாட்டும் நபர் தான் பிரதமர் என்கிறார்கள். ஆனால், இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பர் 1 முதல்வரான உங்களைக் கைகாட்டுகிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதல்வர் ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது. பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம். அதையும் ஒரு கை பார்த்துவிடலாம். ஒட்டுமொத்த உலக அரங்கில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வரப் போராடுவோம்.

நீங்கள் போகும் போது நீங்கள் வகுத்துத் தந்த பாதைகள், கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமைச்சர் உதயநிதி இருக்கிறார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனால் எதை பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இது எனது கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கையும் இதுதான்," இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Dmk Udhayanidhi Stalin Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment