உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த அன்பில் மகேஷ்: பட்டா வழங்கி மகிழ்விப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ், பட்டா திருத்தத்துக்கான நகலை பயனாளிகளுக்கு வழங்கியதோடு, மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சர் அன்பில் மகேஷ், பட்டா திருத்தத்துக்கான நகலை பயனாளிகளுக்கு வழங்கியதோடு, மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-08-22 at 5.25.07 PM

Trichy

திருச்சி மாநகராட்சி 38, 43ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட அரியமங்கலம் காந்திபுரம்  உட்பட திருச்சி கிழக்கு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் காட்டூர் அருகே உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாநகர செயலாளர், மண்டல குழு தலைவருமான மதிவாணன் முன்னிலை வகித்தார்.

Advertisment

இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற  உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

மேலும், முகாமில் வருவாய் துறை சார்பாக பட்டா திருத்தத்திற்கான நகலை அரியமங்கலத்தை சேர்ந்த எலிசபெத்ராணி மற்றும் காந்திமதி ஆகியோருக்கு  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.

WhatsApp Image 2025-08-22 at 5.25.08 PM (1)

Advertisment
Advertisements

மேலும், இந்தமுகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43 சேவைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கும் மனுக்களை பெற்று அதற்கு உடனடி தீர்வு எட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்.

WhatsApp Image 2025-08-22 at 5.25.08 PM

மேலும், இந்த முகாமில் கிழக்கு தாசில்தார் விக்னேஷ் மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி  செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: