சென்னை தரமணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "சென்னையில் ரூ. 4000 கோடி செலவில் மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டாக கூறப்படும் நிலையில் தமிழக அரசு அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/gmplQy7KhcpEwVi0xyLw.jpg)
மழை பாதித்த மாவட்டங்களில் ஒரு மாதம் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சென்னையில் நோய் தொற்றை தடுக்க ஒவ்வொரு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். சென்னை வெள்ளம் என்பது திடீரென்று நடக்கவில்லை. கடந்த 20, 30 ஆண்டுகளாக லஞ்சம், ஊழலால் காசு வாங்கிக்கொண்டு நீர் நிலைகளில் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்து உள்ளனர்.
சி.எம்.டி.ஏ. என்று ஒன்று எதற்கு இருக்கிறது என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், எதையும் திட்டமிடாமல் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்காமல் செயல்படுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.