chennai-flood | anbumani-ramadoss | டிசம்பர் மாத தொடக்கத்தில் இரண்டு நாள்கள் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இங்குள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அளித்துள்ளது. இந்த நிவாரணம் வழங்க டோக்கன்கள் ஏற்கனவே ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இன்று நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டோக்கன் கிடைக்காத நபர்களுக்கும் அடுத்த வாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்கிடையில், “நிவாரணத் தொகை வழங்கப்படும் மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ், “ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்; இல்லையெனில் அந்தப் பணம் டாஸ்மாக் கடைக்குதான் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“