விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் என்.எல்.சி-க்கு நில ஆர்ஜிதமா? தங்கம் தென்னரசு கருத்துக்கு அன்புமணி ராமதாஸ் பதில்

“நேற்று கொண்ட கொள்கைக்கு எதிராக ஏன் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” – அன்புமணி ராமதாஸ்

anbumani ramadoss
அன்புமணி ராமதாஸ்

தற்போது என்.எல்.சிக்கு ஏன் நிலத்தை மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் உருவாக்க, எடுத்து கொடுக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, ”என்.எல்.சி.க்கு நிலம் எடுப்பதற்காக காவல்துறையை வைத்து மக்களை அப்புறப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

திடீரென ஏன் தமிழ்நாடு அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு நிலைப்பாட்டில் இருந்த திமுக இன்று ஏன் இவ்வளவு தீவிரமாக மக்களை, விவசாயிகளை விரட்டியடிக்கவும், விலை நிலங்களை கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகத்திற்கு கொடுக்கவும் முடிவெடுத்துள்ளது என்று தெரியவில்லை.

என்.எல்.சி., என்பது மத்திய அரசின் நிர்வாகம் ஆகும். பொதுவாக தி.மு.க.,வும் பா.ஜ.க.,வும் நேர் எதிராக இருக்கக்கூடிய கட்சிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், மத்திய அரசு நிர்வாகத்திற்காக ஏன் தமிழக அரசு இப்படி நிலத்தை எடுத்துக் கொடுக்கிறது.

தமிழக அரசுக்கு மின்சாரம் தயாரிக்க வேறு நிறுவனங்கள் இல்லையா? 2030க்குள் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நீரேற்று மூலமாக, சூரிய ஒளி மூலமாக, காற்றாலை மூலமாக அதிகப்படுத்துவோம் என்று ஆட்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் 1000 மெகாவாட்டுக்காக ஒட்டுமொத்த மாவட்டத்தை அழிக்க முற்படுகிறார்கள். நேற்று கொண்ட கொள்கைக்கு எதிராக ஏன் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anbumani ramadoss against land acquisition for nlc press meet

Exit mobile version