பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸிடம் இன்று செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அப்போது அன்புமணி ராமதாஸ் கூறுகையில், 'தமிழ்நாட்டின் பெயர் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களின் பெயர்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை' என்றார்.
மேலும், “ரூ.3.5 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் தமிழ்நாடு அரசு வெள்ளத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்க முடியாதா” என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார்.
மேலும், “பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயர் வரவில்லை என்பதெல்லாம் பிரச்சினையா? கட்டாய சட்டத்தின் படி ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க அரசு செயல்பட்டுவருதாக குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும் பட்ஜெட்டை கண்டித்து போராட்டமும் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“