பா.ம.க-வில் விரிசல் உறுதி? 2-வது நாளாக ராமதாஸ் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. இதனால், பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. இதனால், பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
anbumani ramadoss boycotts

பா.ம.க-வில் விரிசல் உறுதி? 2-வது நாளாக ராமதாஸ் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி

கடந்த 10.4.2025 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணியை டாக்டர் ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். பா.ம.க. நிறுவனரான நானே, இனி பா.ம.க. தலைவராகவும் செயல்படுவேன் என்றும், செயல் தலைவராக அன்புமணியை நியமிப்பதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கட்சி நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் குடும்பத்தினர் மற்றும் பா.ம.க. மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து சமாதானப்படுத்தினர்.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் மாநாடு கடந்த 11-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்றனர். மாநாட்டில் டாக்டர் ராமதாசின் பேச்சுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் 16-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்றும், அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு ராமதாஸ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இதில் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் அருள் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

கட்சியில் 91 மாவட்ட செயலாளர்கள், 91 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். ஆனால் கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே டாக்டர் ராமதாசின் அழைப்பை ஏற்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் என மொத்தம் 162 பேர் டாக்டர் ராமதாசின் அழைப்பை ஏற்காமல் கூட்டத்தை புறக்கணித்தனர். பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாசும் பங்கேற்கவில்லை. இது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2-வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

பா.ம.க-வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இது விரைவில் சரியாகும். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம். ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்னையை தீர்க்க இரவு பகலாக முயற்சிக்கிறேன். ராமதாஸ் - அன்புமணி இருவரும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது. ராமதாஸ் - அன்புமணி இடையே கூட்டணி தொடர்பாக எந்த மோதலும் இல்லை. பா.ம.க-வில் விரைவில் சுமூக தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார். சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம் என ஜி.கே.மணி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Pmk Pmk Leader Gk Mani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: