Advertisment

பா.ஜ.க தமிழகம் முழுமைக்குமான கட்சி அல்ல: அன்புமணி

பாஜக மிகப்பெரிய தேசிய கட்சியாக இருக்கலாம். ஆனால், அது தமிழகத்தில் சிறிய கட்சி. பாஜகவை தமிழகம் முழுமைக்குமான கட்சி என்று சொல்ல முடியாது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss comment, Anbumani says BJP is not pan Tamilnadu party, பாஜக தமிழகம் முழுமைக்குமான கட்சி அல்ல, அன்புமணி ராமதாஸ் கருத்து, Anbumani Ramadoss, BJP, Urban Local Body polls

பாஜக மிகப்பெரிய தேசிய கட்சியாக இருக்கலாம். ஆனால், அது தமிழகத்தில் சிறிய கட்சி. பாஜகவை தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சி என்று சொல்ல முடியாது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது குறித்து வருத்தப்படவில்லை என்று கூறியுள்ள பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 40% இடங்களைப் பெற்றிருக்கும் என்று புதன்கிழமை தெரிவித்தார்.

“எந்த சந்தேகமும் இல்லாமல், நாங்கள் கூட்டணி வைத்திருந்தால், வெற்றி சதவீதம் 40:60 ஆக இருந்திருக்கும். திமுக 60% இடங்களை மட்டுமே பெற்றிருக்கும். அதிமுக-பாமக-பாஜக கூட்டணி 40% இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்” அன்புமணி ராமதாஸ் கூறினார். சித்தாந்தங்கள் ஒன்றிணைந்து ஒத்த கருத்துள்ள கட்சிகள், திமுக மற்றும் அதிமுக இல்லாத மாற்று கூட்டணி தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பாமகவின் கருத்து என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2,021 இடங்களில் போட்டியிட்ட பாமக, மாநகராட்சிகளில் 1.38% வாக்குகளையும் நகராட்சிகளில் 1.64% வாக்குகளையும் பேரூராட்சிகளில் 1.56% வாக்குகளையும் பெற்றது. பாமக தனித்துப் போட்டியிட்டதற்காக வருத்தப்படுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், “நாங்கள் கண்டிப்பாக வருத்தப்படவில்லை. நாங்கள் தனித்து போட்டியிட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, ஆளும் கட்சி திமுக, முந்தைய ஆளும் கட்சி அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பண பலத்திற்கு எதிராக மரியாதையான வெற்றியைப் பெற்றோம். கிராமப்புற கட்சியாகக் கருதப்படும் பாமக கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் எல்லா இடத்திலும் இருக்கிறோம். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக போட்டியிடுகிறோம். மக்களின் மனமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி கூறினார்.

முன்னதாக, பாமக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. பாமகவின் முந்தைய கூட்டணி கட்சிகள், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தகளுக்காக பாமகவை அணுகவில்லை.

மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறும் பாஜகவின் கருத்துகள் குறித்து கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, கடந்த இருபது ஆண்டுகளாக பாமக மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து வருகிறது என்று கூறினார்.

“பாஜக மிகப்பெரிய தேசிய கட்சியாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அது சிறிய கட்சி. அக்கட்சியின் 80% வெற்றி சிறிய மாவட்டமான கன்னியாகுமரியில்தான் கிடைத்திருக்கிறது. பாஜகவை தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சி என்று சொல்ல முடியாது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு கிடைத்த வெற்றி. முன்னோக்கிச் செல்வதற்கான பெரிய தளம்” என்று அன்புமணி கூறினார்.

1996ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் எப்போதும் ஆளும் கட்சிக்கே வாக்களிக்க முனைகிறார்கள் என்று கூறிய அன்புமணி, திமுக மற்றும் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். மேலும், ஆளும் கட்சி பல வேட்பாளர்களை வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதாகவும், ஆளுங்கட்சியின் பணபலம் மற்றும் படை பலத்திற்கு எதிராக பாமக போட்டியிட முடியாது என்றும் அன்புமணி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Bjp Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment