Advertisment

'பா.ம.க சாதிக் கட்சியா? வன்மத்தை கக்காதீங்க!' கோபமான அன்புமணி

பா.ம.க தலைவர் அன்புமணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, செய்தியாளர்களின் கேள்வியால் கோபமடைந்து, “உங்கள் மனதில் இருக்கும் வன்மத்தைக் கக்க வேண்டாம்.மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss, PMK, Anbumani angry at journalist, Anbumani says do not spread vehemence PMK as caste party, 'பா.ம.க சாதிக் கட்சியா, வன்மத்தை கக்காதீங்க கோபமான அன்புமணி, அன்புமணி ராமதாஸ், Anbumani Ramadoss, PMK President Anbumani

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைவர் அன்புமணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, செய்தியாளர்களின் கேள்வியால் கோபமடைந்து, “உங்கள் மனதில் இருக்கும் வன்மத்தைக் கக்க வேண்டாம்.மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், 'மாமன்னன்' திரைப்படம் பார்த்திவிட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அன்புமணி ராமதாஸ், "பார்க்கவில்லை" என்றார்.

அரசியல் கட்சியினர் பலரும் இந்தப் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் நீங்கள் பார்க்கவில்லை என்கிறீர்கள். ஏற்கனவே, பா.ம.க ஒரு சாதிய கட்சி என்று பெயர் இருக்கும்போது என்று அந்த செய்தியாளர் கேள்வி கேட்டதால், அன்புமண் ராமதாஸ் உடனே கோபமாகப் பேசினார்.

அன்புமணி ராமதாச் கூறியதாவது: “யார் சொன்னது? எந்த மக்கள் சொன்னது? அது உங்கள் மனதில் இருக்கும் வன்மம். மக்கள் அப்படி நினைக்கவில்லையே. உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள். இப்படியே உங்கள் வன்மத்தை கக்கிக் கக்கி தமிழ்நாட்டில் நாங்கள் செய்த சாதனைகளை மறைக்கிறீர்கள்.

மக்கள் நினைக்கிறார்கள் என்று சொல்லிச் சொல்லி உங்கள் எண்ணத்தைத்தான் வெளிப்படுத்துகிறீர்கள். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கட்சியில் பொதுச் செயலாளராக தாழ்த்தப்பட்டவர் இருக்கிறார்கள்? ஒருவரை சொல்லுங்கள் பார்க்கலாம். இவ்வளவு காலமாக இருந்தார்களா?

நாங்கள் முதல் முதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலித் எழில்மலைக்கு 1998-ல் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம். தி.மு.க 1999-ல் தான் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது. நாங்கள் கொடுத்த ஒரு வருடத்திற்குப் பிறகு தான் ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி தி.மு.க கொடுத்தது. எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகம் செய்த கட்சி தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ, வேற எந்தக் கட்சியோ கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சிதான். நாங்கள் பட்டியல் போட்டால் எவ்வளவோ இருக்கிறது. அவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோம். எனவே உங்கள் மனதில் இருக்கும் வன்மத்தைக் கக்க வேண்டாம். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அதை 2026-ல் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.” என்று கோபமாகப் பேசினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment