Advertisment

'2026-ல் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பா.ம.க இடம் பிடிக்கும்': அன்புமணி

2026ல் கூட்டணி குறித்த கேள்விக்கு, "2026 ல் கூட்டணி ஆட்சி அமைக்கும் அந்த கூட்டணியில் பா.ம.க இருக்கும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss on alliance govt in TN 2026 Tamil News

"அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்ற செய்தி தவறானது. உறவினர்கள் உணர்ச்சிவசப்படுவதையும் தவறாக சொல்ல முடியாது." என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேட்மிட்டன் விளையாடி போட்டியை தொடக்கி வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்வின் போது அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "எனக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள் ஒன்று பேட்மிண்டன், மற்றொன்று ரோட்டரி. போலியோவை இந்தியாவில் இருந்து விரட்டியதில் ரோட்டரிக்கும் முக்கிய பங்கு உள்ளது. தற்போது இந்தியாவில் போலியோ நோய் கிடையாது. அதற்கு முதுகெலும்பாக அடித்தளமாக இருந்தது ரோட்டரி சங்கங்கள்.

25 ஆண்டுகளாக பேட்மிட்டன் விளையாடினேன். கடந்த ஒரு ஆண்டாக முடியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விளையாடவில்லை.எனது காரில் எப்போதும் பேட்மிண்டன் கிட் இருக்கும். அதனை எங்கு சென்றாலும் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். மனஅழுத்தம் சார்ந்த பிரச்சனைகளை விளையாடுவதன் மூலம் சரி செய்து கொள்வேன்.

தமிழக பேட்மிண்டன் சங்கத் தலைவராக 7 ஆண்டுகள் இருக்கிறேன்.நான் வருவதற்கு முன் சிபாரிசு மூலம் வீர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் வந்த பிறகு திறமையின் அடிப்படையில் வீர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெளிப்படையாக வீரர்களின் திறமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இன்று சர்வேதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்  தமிழக வீரர்கள் உள்ளனர்.

காலநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை. காலநிலை மாற்றத்தை கண்டு கொள்ளாமல் அரசும், மக்களும் உள்ளனர். மக்களிடம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசின் காதுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கொண்டு செல்வதால் பயன் இல்லை. வரும் 10 ஆண்டுகளுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது.பருவமழை பெய்யும் நாட்கள் குறைந்து உள்ளது.கடந்த காலங்களில் 47 நாட்கள் வரை பருவமழை (வடகிழக்கு-தென்மேற்கு)நீடிக்கும்.தற்போது 30 நாட்களாக குறைந்துள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைந்த நாட்களில்  மழை பொழிவு அதிகரித்து உள்ளது.கோயம்பேடு பகுதியில் 65 ஏக்கர் இடம் உள்ளது.அதில் பசுமை பூங்கா ஏற்படுத்த வேண்டும்." என்று அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "பேட்மிண்டன் விளையாட்டுக்க்கான கட்டுமானம் தமிழகத்தில் தேவை. மற்ற மாநிலங்களில் எல்லாம் பேட்மிண்டன் கோர்ட்டுகள் சிறப்பாக உள்ளது. தமிழக அரசால் உருவாக்கப்பட்ட இண்டோர் ஸ்டேடியம் சிறப்பானதாக இல்லை. சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் இண்டோர் ஸ்டேடியம் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். 

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, "மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அரசு மருத்துவர்களுக்கு பணிப்பளு அதிகமாக உள்ளது. புதிய மருத்துவர்களை பணிக்கு எடுக்க அரசு தயங்குகிறது. தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்களை நியமிக்க அரசு எழுதப்படாத கொள்கையை பின்பற்று வருகிறது. மருத்துவத் துறையிலும் ,போக்குவரத்து துறையிலும், மின்சாரத் துறையிலும் தற்காலிக பணியாளர்களைத் தான் அரசு நியமனம் செய்கிறது. 

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை.தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளது. 57 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். சென்னையின் நிலைமையை எடுத்துக்காட்டாக பார்க்க வேண்டும். முறையாக வடிகால் கட்டுமானங்கள் அமைக்கப்படாததால் மழை பெய்யும் காலங்களில் போட் தயார் செய்யும் நிலையில் நாம் உள்ளோம்.

டோக்கியோவில் மழை பெய்யும் காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து அதனை மீண்டும் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறி உள்ளார்கள். வடகிழக்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை இனிமேல் தான் அதிக அளவு பெய்ய உள்ளது. 6 கோடிக்கு மேல் மரங்களை நட்டோம் என அரசு சொல்லுகிறார்கள். தமிழக அரசு காலநிலை மாற்றத்திற்காக எடுத்துள்ள முயற்சிகள் பூஜ்ஜியம். 

சென்னையில் பெரிய பூங்காக்களே கிடையாது. கோயம்பேடு பகுதி மக்களுக்கான இடம். அப்பகுதில் பூங்கா அமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக கொடுக்க வேண்டும். உலகின் பெரிய பெரிய  நகரங்களில் பல வகையான பெரிய பூங்காக்கள் உள்ளது.

நமது வரிப்பணத்தில் திமுக அரசு காலநிலை  ஆலோசர்களை நியமனம் செய்துள்ளது. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இதற்காக செலவு செய்கிறார்கள். தி.மு.க 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.

அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மருத்துவர்களின் சேவை மக்களை காப்பது தான்.சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லா மருத்துவர்களும் நினைப்பார்கள். அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்ற செய்தி தவறானது." என்று கூறினார். 

2026ல் கூட்டணி குறித்த கேள்விக்கு, "2026 ல்  கூட்டணி ஆட்சி அமைக்கும் அந்த கூட்டணியில்  பா.ம.க இருக்கும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். 

செய்தி: பாபு ராஜேந்திரன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment