/indian-express-tamil/media/media_files/2025/10/25/anbumani-ramadoss-pmk-coimbatore-press-meet-tamil-news-2025-10-25-16-03-29.jpg)
இன்று சனிக்கிழமை கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்க துவங்கி இருக்கின்றது. மறு புறம் சம்பா பயிர் நாசமாகி விட்டது. இது தி.மு.க அரசின் மெத்தனபோக்கு. ஏரி, குளம் தூர்வாரி நீர் வெளியேற வழி வகை செய்யவில்லை. 4 முக்கிய மாவட்டங்கள் கொள்முதல் செய்த நெல் பாதிக்கப்பட்டுள்ளது. 6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் 18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து இருக்க வேண்டும். ஆனால், 5.5 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்து இருக்கின்றனர்.
ஈரபதம் அதிகமானதால் வாங்க மறுக்கின்றனர். இது திமுக அரசின் தோல்வி. வெறும் விளம்பரத்தை மட்டுமே இந்த அரசு செய்கின்றது. விவசாயிகள் மீது அக்கறை இல்லாத அரசு. இந்த தி.மு.க அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தின் கனிமவளங்கள் தென் மாவட்டத்தில் இருந்து கடத்தப்படுகின்றது. இது குறித்து சுட்டிகாட்டியும் தடுக்கப்பட வில்லை. திமுகவினர் இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
திருவனத்தபுரம் செல்லும் போது 800 லாரிகள் வரை நானே பார்த்தேன். ஆயிரகணக்கான லாரிகளில் கனிம வளத்தை கேரளாவிற்கு கடத்தி செல்கின்றனர். கேரளாவில், கர்நாடகவில் கனிமவளங்களை தடுக்க சட்டம் இருக்கும் போது தமிழகத்தில் அது இல்லை. இதற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும். கனிம வள கடத்ததலை தடுக்க போராட்டம் தொடரும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பது தமிழகத்து செய்யும் மிக பெரிய துரோகம்.
நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல் இருக்கின்றார். வைகோ ஏன் இது குறித்து அழுத்தம் கொடுக்க வில்லை? திருமா ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியலின மக்களுக்கு 22 சதவீதம் வரை இட ஒதுக்கீடு உயரும். இது தெரிந்தும் ஏன் திருமா மௌனமாக இருக்கின்றார். சீட்டுக்காகவா ?
கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இருக்கின்றது. தமிழகத்தில் ஏன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தை வாயை திறக்கவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் பெயரை கூட சொல்ல தகுதியற்றவர். கொ.ம.தே.க ஈஸ்வரன் ஏன் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கேட்கவில்லை? பறவைகள், தெருநாய்கள், மாடுகளை கணக்கு எடுக்கின்றனர். ஓட்டுக்கு கணக்கு எடுக்கின்றனர். ஆனால் வேலை வாய்ப்பு, கல்விக்கு ஏன் கணக்கெடுப்பு நடத்தவில்லை
அத்திகடவு - அவினாசி திட்டம் தோல்வி அடைந்து இருக்கிறது. 20 சதவீத ஏரிகள் மட்டுமே பயன் அடைகின்றது. இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த 4.5 ஆண்டு காலத்தில் புதிய திட்டங்கள், இருக்கும் காலத்தில் திட்டங்கள் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போதே எனக்கு உடன்பாடு இல்லை. 3500 கோடி ரூபாயில் கொண்டு வந்து இருக்க வேண்டும். நீர்மேலாண்மை பற்றி தி.மு.க அரசுக்கு எதுவும் தெரியவில்லை. தென்மாவட்டங்களில் கனிம வள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல போகின்றோம்.
கனிமவள கொள்ளை செய்வதற்காகவே ஒரு அமைச்சரக மாற்றி இருக்கின்றனர். இந்த பணத்தை வைத்து தி.மு.க தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். தனியார் பல்கலை திருத்த சட்டம் தவறானது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். சாதி ஒழிய வேண்டும். சினிமா பாரத்தால் போதுமா? சரியான முறையில் கணக்கெடுத்து அவர்களை முன்னேற்ற கல்வி,வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும். உதயநிதி் ஸ்டாலினுக்கும் நெல் கொள்முதலுக்கும் தொடர்பில்லை. டெல்டா பகுதிகளில் ஏன் சேமிப்புக்கான வசதிகளை இது வரை ஆட்சி செய்த அரசுகள் ஏற்படுத்தவில்லை" என்று அவர் கூறினார்.
ராமதாஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இது எங்கள் உட்கட்சி விவகாரம். அது குறித்து பேச முடியாது" என்று கூறினார். ராமதாஸை கருவி வைத்து ஒட்டு கேட்டீர்களா? என்ற கேள்விக்கு, "எங்கள் உட்கட்சி விவகாரம். அது குறித்து பேச முடியாது" என அன்புமணி மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us