தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஐந்தாவது நாள் நடை பயணத்தை மேற்கொண்ட அவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது, அவர் மேடையில் பேசியதாவது:-
நானும் பெண் பிள்ளைகளை பெற்றவன்தான் என் மனம் மிகுந்த வேதனையில் இருக்கின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க போதைப்பொருள் நடமாட்டமே காரணம். காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் நினைத்தால் ஒரே நாளில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்கலாம்.
/indian-express-tamil/media/post_attachments/5c6a9c1b-9ba.jpg)
தமிழகத்தில் போதைப்பொருள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய காரணத்தால் தான் அசாமை சேர்ந்த வட மாநிலத்து இளைஞன் ஆந்திராவில் வேலை செய்தாலும் தமிழ்நாட்டில் வந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறான் காரணம் எஙகே போதை பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கிறது. அருகிலுள்ள ஆந்திர மாநிலத்தில் 70% வேலை வாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு கிடைக்கிறது ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்ற நிலை இல்லை தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை அவ்வாறு நிறைவேற்றி இருந்தால் இன்றைக்கு மாதம்தோறும் மின் கட்டணம் அளவிடு செய்யும் முறை செயல்பாட்டிற்கு வந்திருக்கும் அப்படி வந்திருந்தால் 30 முதல் 60% மின் கட்டணம் நமக்கு மிச்சமாகி இருக்கும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களுக்கு பட்டை நாமத்தை சாத்தியுள்ளது தி.மு.க அரசு.
கும்முடிபூண்டி சிப்காட்டால் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறி உள்ளது. நீர் நிலம் காற்று மூன்றுமே மாசடைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன அவை வரம்பு மீறி கழிவுகளை வெளியேற்றி வருகின்றது. அதிகமான அனல் மின் நிலையங்கள் இந்த பகுதியில் தான் உள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகமான கேன்சர் வரும் பகுதியாக கும்மிடிப்பூண்டி உள்ளது. கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலைகள் ஏராளமான கழிவுகளை வெளியேற்றி வருகின்றன அதன் காரணமாக சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் கேன்சர் நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இருதயம் கல்லீரல் நுரையீரல் பாதிப்பு போன்றவையும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.
தமிழக வரலாற்றிலேயே தற்போது நடக்கும் தி.மு.க ஆட்சி தான் மிக மோசமான ஆட்சி ஏனென்றால் கடன்மேல் கடன் வாங்கி ஊழல் செய்து கொண்டே இருக்கிறார்கள். 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 54 ஆயிரம் கோடி. ஆனால் இன்று 9,30,000 கோடி கடனாக உயர்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிறது. தமிழகம் 74 ஆண்டுகளில் பெற்ற கடனை திமுக அரசு 4 ஆண்டுகளில் பெற்றுள்ளது. இவ்வளவு கடனை வாங்கி தமிழ்நாட்டு மக்களுக்கு வளர்ச்சியை கொடுக்கவில்லை... மாறாக திமுக அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து கொள்ளை அடித்து ஊழல் செய்து வருகின்றனர். பெண்கள் விவசாயிகள் இளைஞர்கள் யாருக்கும் பாதுகாப்போம் வேலை வாய்ப்பு கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.