ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சார்ந்த பா.ம.க இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கின்றார்கள். தமிழரசன் மற்றும் விஜய கணபதி என்ற இரண்டு நபர்கள் பாதிக்கபட்டிருக்கிறார்கள். இதை செய்தவர்கள் அருகில் உள்ள திருமால்பூர் சேர்ந்த பிரேம் உள்ளிட்ட ஆறு ஏழு நபர்கள். இவர்கள் வி.சி.க-வை சேர்ந்தவர்களும் அனுதாபிகளும் ஆவர்.
இது திடீரென்று நடந்த சம்பவம் கிடையாது கடந்த காலங்களில் அந்த பகுதியில் இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த அளவுக்கு துணிச்சல் வந்துள்ளது. எங்கள் கட்சியை சார்ந்த இரண்டு நபர்களை பெட்ரோல் ஊற்றி திட்டமிட்டு கொளுத்திய கொடூரமான செயலை தமிழ்நாட்டில் எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் திருமால்பூர் மட்டுமல்ல சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களில் அதிக அளவில் கஞ்சா விற்று கொண்டிருக்கிறார்கள் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..
காவல்துறைக்கு தெரிந்து தான் செய்து கொண்டிருக்கிறார்கள் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மாநிலமாக மாறி இருக்கிறது. தனிப்பட்ட சம்பவம் கிடையாது என் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களுக்கும் இது போன்ற கொலை வெறி தாக்குதல் கிண்டல் செய்வது அதிக அளவில் நடைபெற்ற படுகிறது. நாங்களும் எங்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களை அமைதிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.
கடந்த காலம் போல் இருந்தால் வேறு விதமாக கலவரம் போல் மாறும். ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை தொடர்ந்து தொலைபேசி மூலமாக வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் முதலமைச்சர் பார்த்துக்கொள்ள வேண்டும். அவருக்கு கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற காவல்துறை கள்ளச்சாராயம் கஞ்சா விற்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது.
பிரேம் என்கிற நபர் மீது ஐந்தாறு வழக்கு இருக்கிறது கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் அவன் மீது இருக்கிறது. தேடப்படும் குற்றவாளி அவன் ஆனால் காவல்துறையினர் அவனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அவன் பெட்ரோல் ஊற்றி கொடுத்த மனநிலைக்கு வந்தது காரணமே தமிழக அரசும் காவல்துறையும். கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும்.. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது.
ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும் எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது. யார் யார் குற்றவாளி என்று கண்டறிய வேண்டும் ஆறு ஏழு நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
எங்கள் தொண்டர்கள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரை தான் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். உள்ளே இருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பதறுகிறது மருத்துவர் என்பதால் எனக்கு தெரியும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.