‘விடியல் எங்கே?’ தி.மு.க-வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்; ஆவணப் புத்தகம் வெளியிட்ட அன்புமணி

“தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மொத்தம் 505 வாக்குறுதிகள், அதில் 66 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க 12.94% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

“தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மொத்தம் 505 வாக்குறுதிகள், அதில் 66 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க 12.94% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

author-image
WebDesk
New Update
Anbumani where is the dawn

தி.மு.க-வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு, தி.மு.க ஆட்சி குறித்து ‘விடியல் எங்கே’ என்ற ஆவணப் புத்தகத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ளார்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள பா.ம.க தலைவர் அன்புமணீ ராமதாஸ், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் “விடியல் எங்கே?” என்ற தலைப்பில் பா.ம.க சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தை அன்புமணி ராமதாஸ் சென்னை தியாகராய நகரில் செவ்வாய்க்கிழமை (26.08.2025) வெளியிட்டார்.

Advertisment

விடியல் எங்கே என்ற ஆவணப் புத்தகத்தை வெளியிட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற தி.மு.க அரசின் தோல்வியை ஆதாரப்பூர்வமாக ஒரு ஆவணமாக தயாரித்து இன்று அதை வெளியிட்டு இருக்கின்றோம். இந்த ஆதாரம் தான் இந்த விடியல் எங்கே என்ற ஆவணம். இந்த ஆவணத்தில் தி.மு.க-வுடைய தோல்விகள், அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் பொய் வாக்குறுதிகள் சொன்னார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். இது வெறும் பொய் குற்றச்சாட்டு கிடையாது, அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் தான் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, இந்த வாக்குறுதிகள் அவர்கள் சொன்னது. 

இது போன்ற ஆவணங்களை பா.ம.க தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் இந்தியா வளர்ச்சிக்காக இதுவரை 47 ஆவணங்களை வெளியிட்டு இருக்கின்றோம். இது எங்களுக்கு மிகுந்த பெருமை.

விடியல் எங்கே சரியான ஒரு தலைப்பு, தமிழ்நாட்டுக்கு விடியலை கொண்டு வருவோம் என்று சொன்ன தி.மு.க, இன்று இருண்ட தமிழகமாக இருக்கிறது. விடியில் எங்கேயுமே இல்லை, அதை நிரூபித்திருக்கின்றோம். 

Advertisment
Advertisements

தி.மு.க தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் புதுவை உட்பட 40க்கு 39 இடங்களை மக்கள் கொடுத்தார்கள். சட்டமன்ற தேர்தலில் அவர்களை ஆட்சிக்கு வரவைத்தார்கள். தமிழக மக்கள் அடுத்த மக்களவைத் தேர்தலில் 2024 தேர்தலில் 40க்கு 40 தேர்தலில் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். மாற்றாக தி.மு.க மக்களுக்கு கொடுத்ததெல்லாம் ஏமாற்று, பொய், பித்தலாட்டம், ஊழல் நிர்வாக சீர்கேடுகள். அதை வெட்ட வெளிச்சம் போட்டு இங்கு நாங்கள் உங்களுக்கு வழங்கி இருக்கின்றோம். இந்த விடியல் எங்கேயும் இல்லை.” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், “தி.மு.க தேர்தலுக்கு முன்பு அவர்கள் தேர்தல் அறிக்கையிலே கொடுத்த வாக்குறுதிகள் 505. அதில் அவர்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66, அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் 373. நாங்கள் 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று ஒரு பொய்யை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

439 வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசு 12.94% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 87% வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதை முதலமைச்சர், அமைச்சர்கள், அவர்களின் கட்சி சார்பில் யாருடனும் விவாதிக்கத் தயார்” என்று கூறினார்.

Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: