Advertisment

1000 பேருந்துகள் கொள்முதல் டெண்டர்: வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய அன்புமணி வலியுறுத்தல்

1000 பேருந்துகள் கொள்முதல் டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss request to Stalin regarding purchase of buses

அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisment

ஒற்றை ஒப்பந்தப்புள்ளிகளை ஆய்வு செய்யக்கூடாது என்ற மரபுக்கு மாறாக , சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விலைப்புள்ளிகளை தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் திறந்து, ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி ஏற்கப்பட்டால் அது பெரும் அநீதியாக அமையும். அரசுத் துறை நிறுவனங்களின் கொள்முதல்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதன் நோக்கமே, அதில் பல நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும்” என்பதே எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “வெளிப்படைத் தன்மையை கருத்தில் கொண்டு கொள்முதலுக்காக பெறப்பட்டுள்ள ஒற்றை ஒப்பந்தப் புள்ளியை தள்ளுபடி செய்து விட்டு மறு ஒப்பந்தப்புள்ளி கோரும்படி சாலைப் போக்குவரத்து நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment