பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் நீட் எதிர்ப்பு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் RN ரவி கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ், " மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, என்ன கொள்கை முடிவு எடுக்கிறதோ, வந்த முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்.
ஏனெனில் இது அந்த மக்களின் முடிவு; மேலும் ஆளுநர் ஒருபோதும் தனது சொந்த கருத்தை திணிக்க கூடாது" என்றார்.
மேலும் ஆளுநர் செய்தது சரி அல்ல; இதை ஆளுநரால் செய்ய முடியுமா? எனவும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்றும், பயிற்சி மையம் இருந்தால்தான் மாணவர்கள் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை என்றும், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்றும் பேசினார் என்பது நினைவு கூறத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“