கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து எங்களது முற்றுகை போராட்டம் அமைதியாக நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் நோக்கம் எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது.
இந்த நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. முதலீடும் இங்குள்ளது கிடையாது.
இப்படி தொடர்ந்து இந்த மண்ணையும் மக்களையும் என்எல்சி நாசம் படுத்திவருகிறது. இது கடலூர் மாவட்ட பிரச்னையும் கிடையாது.
இது விவசாயிகளின் பிரச்னை. கதிர் விடும் நெற்பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அளித்ததை பார்த்து எனக்கு தூக்கம் போய்விட்டது.
இதனால்தான் நான் இங்கு வந்துவிட்டேன். நாங்கள் இதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறோம். கிராமசபை கூட்டம் முதல் ஒன்றையும் விடவில்லை.
நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்திவந்தோம். அப்போது காவல்துறை எங்களது தொண்டர்கள் மீது கைவைத்தார்கள். தொண்டர்கள் இருவர் தாக்கப்பட்டனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். இங்குள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது.
மேலும் பாஜக திட்டத்தை எதிர்க்கும் திமுக இந்தத் திட்டத்தை மட்டும் ஆதரிப்பது ஏன்? இது மட்டுமின்றி என்எல்சி தயாரிக்கும் 400 முதல் 800 மெகாவாட் மின்சாரம் தேவையில்லை.
மின்சாரம் தயாரிக்கவும் மாற்று வழிகள் உள்ளன. அதாவது சோலார், காற்று என பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் உணவுக்கு நிலம், விவசாயம் தவிர மாற்று வழிகள் இல்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“