திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமதாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ம.க. சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நிர்வாக வசதிக்காவும், திட்டங்கள் அம்மக்களை போய் சேரவும் திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாது கடலூர், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் பிரிக்க விட மாட்டார்கள். ஏனெனில் இங்கு சில கட்சிகளை சேர்ந்த குறுநில மன்னர்கள் உள்ளனர். அவர்கள் இதனை பிரிக்க விட மாட்டார்கள்.
இவர்களுக்கு ம்ககளை பற்றி எந்தக் கவலையும் இல்லை. மாறாக தங்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்” என்றார்.
குறுநில மன்னர்கள் என தி.மு.க., அ.தி.மு.க.வினரை அன்புமணி ராமதாஸ் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“