Advertisment

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை - அன்புமணி ராமதாஸ்

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம், அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை, சட்டமன்றத்தில் எடுபடாது - கோவையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

author-image
WebDesk
Oct 20, 2022 14:05 IST
New Update
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை - அன்புமணி ராமதாஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம், அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை, நுட்பமான விளக்கம் எதுவும் அதில் இல்லை, சட்டமன்றத்தில் எடுபடாது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு கட்சி சார்ந்த தொண்டர்கள் பலர் பூங்குத்துக் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படியுங்கள்: கோவை, தூய்மை பணியாளர்கள் தர்ணா.. மேயருக்கு கொண்டுவந்த மாலை சாலையில் வீச்சு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், கோவை சார்ந்த பிரச்சினைகள் சிலவற்றையும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை அதனை வைத்து அரசியல் செய்யலாம் சட்டமன்றத்திற்குள் எடுபடாது என அன்புமணி தெரிவித்தார்.

publive-image

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து பேசிய அன்புமணி, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், காவல்துறையினர் இதனை பாடமாக வைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க.,வின் இருக்கை பிரச்னை தொடர்பாக பதில் அளித்த அன்புமணி, இது கட்சி சார்ந்த பிரச்சினை மேலும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை வைத்து, அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என பதிலளித்தார்.

கோவை மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேசிய அன்புமணி, இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களின் வாழ்வாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

அடுத்ததாக, 90% பணிகள் முடிந்ததாக கூறப்படும், அத்திகடவு அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை என அன்புமணி கேள்வி எழுப்பினார்.

பரம்பிகுளம் அணையில் 12 டி.எம்.சி நீர் வீணாகியுள்ளது, இனி இது போன்று நடக்க கூடாது. செங்கல் சூளைகளுக்காக செம்மண் அள்ளுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரிக்கான தேவை உள்ளது, என்று அன்புமணி கூறினார்.

பின்னர் தீபாவளி தினத்தன்று மது கடைகள் திறந்து வைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மதுக்கடைகளுக்கு இலக்குவைத்து விற்பனை செய்வதை விட மாணவர்கள், குழந்தைகளுக்கான கல்வி, தடுப்பூசிகளுக்கு இலக்கு வைத்து அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும். அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவாக செயல்படுத்தவேண்டும், பாண்டியாரு புன்னம்புழா, நல்லாறு பாம்பாறு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

சட்டமன்றம் 100 நாட்கள் நடக்க வேண்டும், அதிகமான விவாதம் நடத்தபட வேண்டும். போதை கலாச்சாரம் தடை செய்ய வேண்டும் போதுமான காவலர்கள் இல்லை ஆகையால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை காலம் என்பதால் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவன பால் விலையை குறைக்க வேண்டும். ஆவின் பால் விலையை விட தனியார் பால் விலையை உயர்த்துள்ளனர் ஒரு ஆண்டில் நாலு முறை விலை உயர்த்தபட்டுள்ளது அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி கூறினார்.

மேலும் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தற்போது ஒரு அரசு பள்ளி அறையை பா.ம.க மாடல் பள்ளி அறையாக மாற்றியுள்ளார். அதனை தமிழக முதல்வரும் பள்ளிகல்வித்துறையும் பின் பற்றி அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Coimbatore #Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment