செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

6 மாதத்துக்குப் பிறகு விழித்துக் கொண்ட ககன்தீப் சிங் பேடி குழு என்றும், செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

6 மாதத்துக்குப் பிறகு விழித்துக் கொண்ட ககன்தீப் சிங் பேடி குழு என்றும், செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss urges TN GOVT to Implement old pension scheme by September Tamil News

"தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது." என அன்புமணி கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு  வரும் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி   அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 4-ஆம்  தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த குழு, இப்போதாவது விழித்துக் கொண்டு பணி செய்ய தொடங்கவிருப்பது  மனநிறைவளிக்கிறது.

Advertisment

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு பழைய  ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி  வருகிறது. ககன்தீப் சிங் பேடி குழு அமைக்கப்பட்டும் கூட, அக்குழு அதன் பணிகளை தொடங்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில்  அறிக்கை வெளியிட்டிருந்தேன். மேலும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம்  விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறேன்.  இதனால் ஏற்பட்ட அழுத்தங்களின்  காரணமாகத் தான்  அரசு விழித்துக் கொண்டு  ககன்தீப் சிங் பேடி குழு கருத்துக் கேட்புக் கூட்டங்களை  நடத்தும் என்று  அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி ஆகும்.

கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அடுத்த மாதம் 9-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசுத் தரப்பில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வுப் பணிகளையும் முடித்து செப்டம்பர் மாத மத்திக்குள்  ககன்தீப் சிங் பேடி குழு  அதன்  அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில்  செப்டம்பர் மாத இறுதிக்குள்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

Tn Government Anbumani Ramadoss Tamil Nadu Govt

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: