Advertisment

பா.ம.க சாதிக்கட்சி என்கிற பிம்பத்தை உடைத்தெறிவோம் - அன்புமணி ராமதாஸ்

எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் பாமகவுக்கு சாதிக்கட்சி என்ற பெயர் இருப்பதாகவும், அந்த மாயையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

author-image
WebDesk
May 29, 2022 08:46 IST
New Update
பா.ம.க சாதிக்கட்சி என்கிற பிம்பத்தை உடைத்தெறிவோம் - அன்புமணி ராமதாஸ்

சென்னை அருகே திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜிகே மணி தலைமை தாங்கினார். அதில், பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

அப்போது, பாமக 2. 0, கட்சியின் சாதிப் பிம்பத்தை உடைத்து, தமிழக மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளோம் என்பதை எடுத்துரைப்பதே கட்சியின் அடுத்தக்கட்ட இலக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தொண்டர்களிடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், " மாநிலத்தை ஆளத் தேவையான அனைத்துத் தகுதிகளும் பாமகவிடம் உள்ளது. நமது சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது. தமிழக மக்கள் அதனை உணர்ந்து, நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை நாம் முதல்வராக பதவியேற்றால், முதல் கையெழுத்தே பூரண மதுவிலக்கு கோப்பில் தான் போடுவேன் என்றார்.

மேற்கு தமிழ்நாட்டின் விவசாய நிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு குழாய் பதிப்பதையும், சென்னையில் மோனோ ரயில் திட்டத்தையும் பாமக முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தில் ‘சமச்சீர் கல்வி’யை அறிமுகப்படுத்தியதற்காகவும், 108 சமூகங்களை எம்பிசி பிரிவின் கீழ் இணைத்ததற்காகவும், வன்னியர்களுக்கு 10. 5% உள் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பெருமைகளும் அன்புமணி ராமதாஸூக்கு உள்ளது.

மேலும் பேசிய அவர், நான் 2004ல் இந்தியாவின் இளைய கேபினட் அமைச்சரானபோது, ஊழலற்ற அரசியலை கடைபிடிக்க வேண்டும் என்றும்,இந்திய குடியரசுத் தலைவருக்கு இணையான மருத்துவச் சிகிச்சையை சாமானியர்களும் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனது தந்தை அறிவுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி பாமக மட்டுமே. தமிழகத்தை ஒப்பிடுவது சிங்கப்பூருடன் இருக்க வேண்டுமே தவிர பீகார் போன்ற பின்தங்கிய மாநிலத்துடன் அல்ல.

publive-image

அனைத்து கட்சிகளும் சாதி, மதத்தின் பெயரால் பிரித்தாளும் அரசியலை செய்து வருகின்றன. ஆனால், பாமக சமூக நீதி மற்றும் அனைவருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த போராடி வருகிறது. எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் பாமகவுக்கு சாதிக்கட்சி என்ற பெயர் இருப்பதாகவும், அந்த மாயையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், அன்புமணி ராமதாஸை மாநிலத்தின் முதலமைச்சராக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும். தற்போது, ஒரு பெருமைமிக்க தந்தையாக உங்கள் முன் நிற்கிறேன். அற்ப அரசியலில் ஈடுபட்டு, கட்சிப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது.

1996ல் முதன்முதலாக சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோது 4 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்தும், நம்மிடம் 5 சீட் மட்டுமே உள்ளது. இந்த மோசமான செயல்பாட்டிற்கு யார் காரணம்? ஆனால், 2012ல் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி, டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. புதிய கட்சித் தலைவராக அன்புமணி பதவியேற்றதும், கட்சிக்குள் எதிர்பார்த்த மாற்றங்கள் வரலாம். நமது இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Anbumani Ramadoss #Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment