/indian-express-tamil/media/media_files/2025/09/11/balu-ramadoss-2-2025-09-11-14-06-55.jpg)
பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், “எல்லா கேள்விகளுக்கும் வழக்கறிஞர் பாலு பதிலளிப்பார். இதை விட முக்கியமான வேலை எனக்கு இருக்கிறது” என்று கூறினார்.
பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகனும் அக்கட்சியி தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பா.ம.க ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.
இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “45, 46 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்து, கஞ்சியோ கூழோ குடித்து 96,000 கிராமங்களுக்குச் சென்று கஷ்டப்பட்டு பா.ம.க-வை உருவாக்கினேன், வளர்த்தேன்.
இந்தக் கட்சியில் சேர்பவர்களுக்கு இந்தியாவில் யாரும் செய்யாத அளவிற்கு அரசியல் பயிலரங்கம் நடத்தினேன். அதற்கு அன்புமணியின் ஆதரவு இல்லை. அதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை.
பயிற்சிக்காக வரும்போது பயந்து பயந்து வந்தோம். செல்லும்போது வீராங்கனியாக செல்கிறோம் என பயிற்சிக்கு வந்தவர்கள் கூறிச் செல்வார்கள்.
கட்சியைவிட்டு திடீரென அவரை நீக்கிவிட்டீர்கள். அவர் இனி என்ன செய்வார் என நீங்கள் கேட்கலாம். அவர் தனிக் கட்சி ஆரம்பித்துக்கொள்ளலாம்.
ஏற்கெனவே ஒருவருடத்திற்கு முன்னதாகவே மூன்று முறை இது குறித்து அவரிடம் தெரிவித்துவிட்டேன்.
தனி மனிதராக ராமதாஸ் உருவாக்கிய கட்சி பா.ம.க. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பிள்ளையாக இருந்தாலும் சரி... மற்றவராக இருந்தாலும் சரி உரிமை இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், “எல்லா கேள்விகளுக்கும் வழக்கறிஞர் பாலு பதிலளிப்பார். இதை விட முக்கியமான வேலை எனக்கு இருக்கிறது” என்று கூறினார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியின் ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறியதாவது “பா.ம.க விதிகளின்படி கட்சியின் நிறுவனருக்கு நிர்வாகத்தில் அதிகாரம் இல்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸின் எந்த அறிவிப்பும் அன்புமணியைக் கட்டுப்படுத்தாது” என்று கூறியுள்ளார்.
அன்புமணியின் ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறியதாவது: “பா.ம.க-வில் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குதான் அடிகாரம். அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை. பா.ம.க விதிகளின்படி கட்சியின் நிறுவனருக்கு நிர்வாகத்தில் அதிகாரம் இல்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸின் எந்த அறிவிப்பும் அன்புமணியைக் கட்டுப்படுத்தாது.
தேர்தல் ஆணையம் முறையாக எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை. பா.ம.க-வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்கிறார்.
அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. அன்புமணி ராமதாஸ் உளவு பார்த்து இருந்தால் இப்படி சூழல் ஏற்பட்டிருக்காது. நாங்கள் கட்சியின் விதிகளின்படி செயல்படுகிறோம். அதிகாரமும் அங்கீகாரமும் எங்களிடம் உள்ளது. கூட்டணி குறித்து வரும் காலங்களில் அறிவிப்போம். கட்சியின் விதிப்படி யாருக்கு என்ன அதிகாரம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது’ என்று வழக்கறிஞர் பாலு கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.