/indian-express-tamil/media/media_files/2025/05/02/q2wXMhTDvx5yQEfNKhYS.jpg)
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகர் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் காலி பணியிடத்தை அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும். காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு லோக்கல் ட்ரான்ஸ்பர் மாவட்ட ட்ரான்ஸ்பர் வழங்க வேண்டும். பேஸ் கேப்பர் போடுவதில்லை, உணவு தயாரிக்க செலவினத்தை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகர் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சியில், மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர் சங்கத்தின் சார்பில் 1000-க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1000க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து தொடர் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் குடையை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இன்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர் .
செய்தி: சண்முகவடிவேல் – திருச்சி, பாபு ராஜேந்திரன் - கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.