தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை சென்னை நகர போலீஸார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை செம்பியத்தில் வைத்து ஜூலை 5ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
பைக்கில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் தாக்கி படுகொலை செய்தது. அந்தக் கும்பல் ஆற்காடு சுரேஷ் ஆள்கள் என்று கூறப்படுகிறது.
ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளார். இவரின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் காவல்துறைக்கு மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஆம்ஸ்ட்ராங் சார் கொலை செய்தயை கேட்டாலே பயமாக இருக்கிறது. இந்தக் கொலையில் ஈடுபட்டர்கள் உண்மையில் இவர்கள் தானா? முன்கூட்டியே ஆஜராக ஆள்கள் இருக்கிறார்கள். ரொம்ப பயமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“