திண்டுக்கல் அரசு மருத்துவர், அளித்த புகாரின் பெயரில், லஞ்சம் வாங்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த பணத்தை தனது உயர் அதிகாரிகளுக்கு தேவைப்படும் என்பதால் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் பாபு என்பார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மருத்துவர் பாபு வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்துள்ளதாகவும், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று அங்கித் திவாரி கேட்டுள்ளார். 3 கோடி கேட்ட அவர், கடைசியாக ரூ. 51 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் பாபு, லஞ்ச ஒழிப்புதுறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். மருத்துவர் பாபு உதவியுடன், லஞ்ச ஒழிப்பு துறையினர், அங்கித் திவாரியை கைது செய்துள்ளனர். நெஞ்சாலையில் மருத்துவர் பாபு, அமலக்காத்துறை அதிகாரியிடம் பணம் கொடுக்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் இவரை கைது செய்தனர்.
இவருக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வெளியிட்ட தகவலில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ள ஆவணங்களை கண்டுபிடித்ததாக கூறியுள்ளது. சென்னை, அமலக்காத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அங்கத் திவாரியின் அறை மட்டுமே சோதனையிடப்பட்டதாக கூறினார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அங்கத் திவாரி தொடர்பான எப்.ஐ.ஆர் பதிவில், அவர் பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பெயரில்தான் மருத்துவரிடம் விசாரணை நடத்தியதாகவும், இந்த பணம் தனது உயர் அதிகாரிகளுக்கு தேவைப்படும் என்பதால் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தியில் இடம் பெறும் தகவல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“