scorecardresearch

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் காமராஜர், அண்ணா பெயர் பலகை: 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரிகள் நடவடிக்கை

கடந்த 2017ம் ஆண்டு சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அண்ணா மற்றும் காமராஜர் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.

chennai airport

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அவருடைய கோரிக்கையை ஏற்று, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 1989ம் ஆண்டு அண்ணா பன்னாட்டு முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார்.

கடந்த 2017ம் ஆண்டு சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அண்ணா மற்றும் காமராஜர் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தலைவர்களின் பெயர்களை வைக்க அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.

விமான நிலையம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விரிவாக்கப் பணிகள் முடிந்ததால் மீண்டும் அண்ணா மற்றும் காமராஜர் பெயர் பலகைகளை கொண்டுவருமாறு டி.ஆர்.பாலு எம்.பி. அறிவுறுத்தினார்.

மேலும் கடந்த ஏப்ரல் 8ம் தேதி, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

அந்த கட்டிடத்தில் அண்ணா பன்னாட்டு முனையம் எனவும், உள்நாட்டு முனையத்தில் காமராஜ் உள்நாட்டு முனையம் எனவும் மீண்டும் பெயர் பலகைகளை, தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் பெயர் வைத்திருந்தனர்.

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு விமான நிலைய முனையங்களுக்கு மீண்டும் தலைவர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் மக்களினிடையே பெரும் வரவேற்பு கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anna and kamarajar welcome board in chennai meenambakkam airport

Best of Express