அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சட்டப் பேரவைக்குள் அ.தி.மு.க உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன.6) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை உடன் கூட்டத் தொடர் தொடங்க இருந்தது. பேரவைக்கு ஆளுநர் வந்த உடன் உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம், அரசியல் அமைப்பு அவமதிக்கப்பட்டதாக கூறி வெளியேறினார்.
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் 'யார் அந்த சார்?' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்தனர்.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.