அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இன்று (அக்டோபர் 27) முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை தங்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ், "அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் குறிப்பிட்ட தேதியில் தொடங்க உள்ளனர். பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் அவர்கள் தேர்வு செய்த துறை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்" என்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஜ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு இன்றும் (அக்டோபர் 27) நாளையும் (அக்டோபர் 28) முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 15 நாள்கள் அறிமுக வகுப்பு நடைபெறும். மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை, கல்லூரி குறித்து எடுத்துரைக்கப்படும். படிப்புக்குபின்னர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும் என்று வேல்ராஜ் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“