Anna University Announced New Rules : ஒற்றை இலக்க செமஸ்டரிலும், இரட்டை இலக்க செமஸ்டரிலும் தோல்வியுற்றவர்கள் அதே மாதிரியான ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க செமஸ்டரில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் மாணாவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
புதிய தேர்வு விதிமுறைகள்
மேலும் ஒரு பருவத் தேர்வில் அதிக பட்சம் மூன்று அரியர்களை மட்டுமே எழுத முடியும் என்ற விதிமுறையும் இதில் இருந்தது. மாணவர்களின் எதிர்ப்பினை தொடர்ந்து தங்களின் புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது ஐந்தாவது செமஸ்டர் தேர்வில் நுழையும் போது மாணவர்கள் அரியர் எதுவும் வைத்திருக்கக் கூடாது என்று விதிமுறை விதித்திருக்கிறது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு விதிமுறைகளை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதல் செமஸ்ட்டரில் ஒரு மாணவர் எந்த பாடத்திலாவது தோல்வி அடைந்தால், அதனை அடுத்த 3 செமஸ்டர் தேர்வுகளுக்குள் அப்பாடத்தினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
நான்காவது செமஸ்ட்டரிலும் அந்த பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்றால், ஐந்தாவது செமஸ்டர் பாடங்களை படிக்க இயலாது. மீண்டும் முதல் செமஸ்டரில் இருந்து படிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6வது செமஸ்டரில் நுழையும் போது 2ம் செமஸ்டரின் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 7வது மற்றும் 8வது செமஸ்டர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.