/indian-express-tamil/media/media_files/2025/01/03/h2882AymFDKuWiGSEyqR.jpg)
அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து மதுரையில் இருந்து சென்னை நோக்கி பேரணியாக புறப்பட முயன்ற பா.ஜ.க மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/03/YD6I2nmEgsV4pcU0Kxdq.jpeg)
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜன.3) மதுரை சிம்மக்கல்லில் தமிழக பா.ஜ.க மகளிர் சார்பில் அணி பேரணி நடைபெறும் எனக் அறிவிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/03/Wb3x2Fw6TNCJ54HSpD99.jpeg)
ஆனால் காவல்துறை பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. பாஜக நிர்வாகி குஷ்பு தலைமையில் மகளிர் அணியினர் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் முயன்றனர். தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/03/fgFGlj93to6r4tjFS00Z.jpeg)
தொடர்ந்து தடையை மீறி பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது பேசிய குஷ்பு, விளம்பரம் தேவைப்படுவது தி.மு.கவுக்கு தான், பா.ஜ.கவுக்கு இல்லை. தேர்தல் வாக்குறுதியாக பல விஷயங்கள் சொன்னீர்கள். நேற்று கூட பெண்களுக்காக ஏதோ ஒரு புதிய திட்டம் கொண்டு வந்துருக்கீங்க.. பெண்களை காப்பாற்றுவதற்கு வக்கில்லை. ஆனால் திட்டம் கொண்டு வருகிறீர்களா? முதலில் பெண்களை காப்பாற்றுங்கள் என்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/03/EzTZ6Jx8zNCSfHimLAgB.jpeg)
தொடர்ந்து, இந்த பேரணிக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்பது தெரியும். திமுக ஆட்சிக்கு எதிராக, திமுகவின் தவறான செயல்களை எதிர்த்து யார் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் எங்களுக்கு எங்குமே அனுமதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் எதைப் பேசினாலும் உண்மையை மட்டும் தான் பேசுவோம் என திமுகவிற்கும் நன்றாகவே தெரியும்.
எனவே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை இன்று மக்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us