சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதனிடையே, மாணவி அளித்த புகாரில், இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் தான் வேறு ஒரு சாருடன் இருக்க வேண்டும் என மிரட்டியதாகவும், போனில் யாரிடமோ 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் 'யார் அந்த சார்' என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையைடுத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு சார் என்று கூறி பேசியதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் மாணவி உறுதியாக தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நான் மிரட்டி விட்டு வந்துவிடுகிறேன் என ஞானசேகரன் கூறியதாகவும் மாணவி கூறியுள்ளார். இந்நிலையில் ஞானசேகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போனில் பழைய வீடியோவில் திருப்பூரை சேர்ந்த ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது. திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை விசாரிக்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.