வாங்க, நாம நேரடியா நிகழ்ச்சிக்கு செல்வோம்...
திருமலையில், இன்று முதல், காத்திருப்பு அறையில் காத்திருக்காமல், நேரடி தரிசனத்திற்கு பக்தர்களை தேவஸ்தானம் அனுமதிக்க உள்ளது.கொரோனா வைரஸ் பரவி வருவதால், திருமலையில் பக்தர்கள், ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, தேவஸ்தானம் எடுத்து வருகிறது. திருப்பதியில் உள்ள, அலிபிரி சோதனை சாவடி மற்றும் நடைபாதை மார்க்கங்களில், சுகாதார பணியாளர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.காத்திருப்பு அறையில், பக்தர்கள் பல மணி நேரம் கூடுவதால், ஒருவருக்கு ஏற்படும் தொற்று, மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால், இன்று முதல், 31ம் தேதி வரை, ஏழுமலையானின் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே, பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
விழிப்புடன் இருப்போம்...
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்ட்ரல் மெட்ரோ நிலையம் எதிரில், 20 மாடிகளுடன், சென்ட்ரல் சதுக்கம் கட்டும் பூர்வாங்க பணிகள், ஜரூராக நடந்து வருகிறது. பூங்கா மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிந்ததும், சதுக்கம் கட்டுமான பணி, மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. விக்டோரியா ஹால் எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை யோரம் உள்ள, பழைய சுவர் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய சுவர் கட்டுமான பணி நடந்து வருகிறது. இத்துடன், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் - மூர்மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில், அழகிய பூங்கா, வண்ண நீருற்றுகள், அலங்கார மின் விளக்கு கோபுரங்கள், பயணியர் அமர, பளிங்கு கல் இருக்கைகள்,நீரூற்றுகள், வண்ண மின்விளக்கு கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன.
சிங்கார சென்னை...
மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்க, தமிழக அரசு தயக்கம் காட்டுவதால், அண்ணா பல்கலைக்கான, உயர் கல்வி அந்தஸ்து, அடுத்த கல்வி ஆண்டுக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் முன், மத்திய அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி, புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கான செலவில், 50 சதவீதத்தை, தமிழக அரசு ஏற்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்பதில், தமிழக அரசு தாமதம் செய்தது. சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், அண்ணா பல்கலை, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுமோ என்று, பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர். தமிழக அரசின், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும், சந்தேகம் எழுந்தது. இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில், தெளிவான விளக்கம் தரப்பட்டது. அதில், &'அண்ணா பல்கலை, எந்த விதிகளின் படி, தற்போது செயல்படுகிறதோ, அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது&' என, கூறியது. இதை தொடர்ந்தும், தமிழக அரசின் உயர் மட்டக் குழு முடிவு எடுக்கவில்லை. சட்டசபையில், உயர் கல்வி துறையின் மானிய கோரிக்கையில், இதற்கான அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் வராததால், அண்ணா பல்கலையின் சிறப்பு அந்தஸ்து விவகாரம், அடுத்த கல்வி ஆண்டுக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
என்னடா, அண்ணா பல்கலைகழகத்துக்கு வந்த சோதனை
ஹாய் கைய்ஸ் : உலகத்தரத்தில் நவீனமயம் ஆகும் இந்திய ரயில் நிலையங்கள்
ஹாய் கைய்ஸ் : காலேஜ்ல படிச்சா நாலெட்ஜ் வளருதோ இல்லயோ, நம்ம ஆயுள் வளருமாம்....
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. கடைசியாக விஜய் சேதுபதியுடன் லட்சுமி மேனன் நடித்த ‘றெக்க’ படம் 2016-ல் வெளிவந்தது. அதன்பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்வதாக கூறினார். சினிமாவை விட்டு விலகியது லட்சுமி மேனன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 வருடங்களுக்கு பிறகு லட்சுமி மேனன் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். முத்தையா இயக்கும் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக ‘கொம்பன்’, சசிகுமார் ஜோடியாக ‘குட்டிப்புலி’ படங்களில் லட்சுமி மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.