Anna University engineering counselling: 2018ம் ஆண்டு பொறியியல் படிப்புக்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்காக ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது.
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு:
தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் பொதுக்கலந்தாய்வு மூலம் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசை பட்டியலில் 15,000 இடங்களுக்குள் வந்துள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு இன்று முதல் அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் கணினி, இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த கலந்தாய்வு மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்று கொள்ளலாம். கலந்தாய்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைகான செயலாளர் தெரிவித்துள்ளார்.