கலையரசன் விசாரணைக் குழு அறிக்கையை ஆளுநரிடம் இருந்து சூரப்பா பெறலாம் – தமிழக அரசு

1978 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை சட்டத்தில் (Anna University Chennai Act of 1978) ஆளுநருக்கு விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் முன்பு மனு தாரருக்கு விசாரணை அறிக்கையின் நகலை தர வேண்டும் என்று மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். மேலும் இந்த வழக்கிற்காக விதிவிலக்கு செய்தால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று வாதாடினார்.

Anna University former vice chancellor surappa’s ongoing case : கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா 2018ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் போன்ற விவகாரங்களில் அவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இவர் மீது புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அதிமுக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்தது உயர் நீதிமன்றம். மேலும் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிபதி கலையரசனின் அறிக்கையை சூரப்பாவுக்கு அளிக்கலாமா என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது உயர் நீதிமன்றம்.

பார்வையாளர்கள் 150 பேர் மட்டுமே அனுமதி: ஜல்லிக்கட்டுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அரசு சார்பில் ஆஜரானார். விசாரணையில், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் அதனை சூரப்பாவிற்கு தர இயலாது என்றும் கூறினார். மேலும் அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் ஆளுநர் இது தொடர்பாக முடிவு எடுப்பார் என்றும் வாதாடினார்.

அறிக்கையை சூரப்பாவிடம் தர அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று நீதிபதி பார்த்திபன் கேள்வி எழுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் அறிக்கையை சமர்பித்தால் தான் சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பு அளிக்க முடியும் என்றும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த சண்முக சுந்தரம், 1978 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை சட்டத்தில் (Anna University Chennai Act of 1978) ஆளுநருக்கு விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் முன்பு மனு தாரருக்கு விசாரணை அறிக்கையின் நகலை தர வேண்டும் என்று மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். மேலும் இந்த வழக்கிற்காக விதிவிலக்கு செய்தால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று வாதாடினார். 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டம் கிட்டத்தட்ட துறை ரீதியான விசாரணைக்கு நிகரானது என்பதால் மனுதாரருக்கு அறிக்கையை பெறும் முழு உரிமையும் உண்டு என்று நீதிபதி கூறினார்.

சென்னை ஐகோர்ட்டில் அடுத்த ஒராண்டில் ஓய்வுபெறும் 12 நீதிபதிகள்

வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வேந்தர் என்ற அடிப்படையில் அவருடைய பணி சட்டப்பூர்வமானது என்றும், அறிக்கை தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக ஆளுநரிடம் இருந்து சூரப்பா பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். சூரப்பா தரப்பு விவாதத்தில் கலையரசன் விசாரணைக்குழு வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமலே உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anna university former vice chancellor surappas ongoing case adjourned for judgement

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com