அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

Anna University UG, PG results declared: முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டன.. 

செமஸ்டர் தேர்வு முடிவுகளை மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.   aucoe.annauniv.educoe1.annauniv.edu, and annauniv.edu.

Anna University UG, PG Results:  அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நேற்று (29.6.18) மாலை வெளியாகின.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் நேற்று இணையதளங்களில் வெளியிடப்பட்டதோடு ஒவ்வொரு மாணவருக்கும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முதல் பருவ மாணவர்களுக்கு அரியர் பேப்பர் தேர்வுகளும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகளும்,  முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டன.

பொறியியல் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிவிக்கும் முறை கடந்த ஆண்டில் இருந்து அண்ணா பல்கலை.யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்காகவும் கூடுதல் வசதியாகவும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close