Anna university results nov - dec 2018: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, annauniv.edu ஆகியவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த இணையதளங்களில் ஒன்றை தேர்வு செய்து நுழையவும். மதிப்பெண் சான்றிதழை பின்னர் ஒரு தேதியில் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும்.
அண்ணா பலகலைக்கழகம், உலக அளவில் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் மொத்த பொறியியல் கல்லூரிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறது. சுமார் 250 பொறியியல் கல்லூரிகள் இதன் ஆளுகையில் வருகின்றன.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை, முதுநிலை படிப்புகள் (B.E /B.Tech /B.Arch /M.B.A /M.C.A /M.E / M.Tech / M.Arch/M.Sc/B.Sc) அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கின்றன. நாடு முழுவதும் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு பயில்கிறார்கள். தமிழக மாணவர்கள் பெருமளவில் பயின்று வருகிறார்கள்.
Anna university nov/dec 2018 results at annauniv.edu.coe2: அண்ணா பல்கலைக்கழகம் நவம்பர்/டிசம்பர் 2018 தேர்வு முடிவுகள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் முறையில் தேர்வுகள் நடக்கின்றன. ஒற்றைப்படை எண் வரிசை கொண்ட செமஸ்டர் (1, 3, 5) ஆகியவற்றுக்கான தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கின்றன. இவற்றுக்கான தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வெளியாகும்.
அதேபோல இரட்டைப்படை எண் வரிசை (2, 4, 6) கொண்ட செமஸ்டர் தேர்வுகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். 2018-ம் ஆண்டும் வழக்கம்போல நவம்பர், டிசம்பரில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று முடிந்தது. 2018 நவம்பர், டிசம்பரில் நடைபெற்ற யு.ஜி., பி.ஜி., தேர்வு முடிவுகள் ஜனவரி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளுக்கான நவம்பர்/டிசம்பர் 2018 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான www.aucoe.annauniv.edu மற்றும் www.coe1.annauniv.edu ஆகியவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகளின் முடிவுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இன்று எந்நேரமும் அந்த முடிவுகள் இணையத்தில் பார்வைக்கு வைக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது ?
1. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, annauniv.edu ஆகியவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த இணையதளங்களில் ஒன்றை தேர்வு செய்து நுழையவும்.
2. இந்த இணையதளங்களில் UG / PG Results - November/December 2018 Examinations என்கிற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியானதும் இந்த லிங்க் இணைக்கப்பட்டிருக்கும்.
3. உங்களில் பதிவு எண் மற்றும் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை அதில் பதிவு செய்தால், ரிசல்ட் தெரியும்.
4. தேர்வு முடிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொள்ளலாம். எதிர்கால தேவைக்கு டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழை பின்னர் ஒரு தேதியில் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.