Anna University thanks actor Ajith Kumar : அண்ணா பல்கலைக்கழகத்தின் விமான வடிவமைப்பு பிரிவில் இருக்கும் தக்ஷா குழுவிற்கு ஆலோசகராக பங்காற்றினார் நடிகர் அஜித். தக்ஷா குழுவின் ஆளில்லா விமானத்தின் வடிவமைப்பிற்கு ஆலோசகராக கடந்த 10 மாத காலம் அஜித் பணியாற்றினார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் நன்றிக் கடிதம்
அவரின் ஆலோசனைப் படி உருவாக்கப்பட்ட அந்த ஆளில்லா விமானம், மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் தக்ஷா குழுவினர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்த விமான வடிவமைப்பு சமர்பிக்கப்பட்டு இரண்டாம் இடம் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து, தக்ஷா குழுவிற்கு அஜித் கூறிய ஆலோசனை, பங்களிப்பு, மற்றும் ஈடுபாட்டிற்கு நன்றி கூறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நன்றி கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம் அனுப்பிய கடிதம்
அதில் ஆளில்லா விமானம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உங்களின் பங்களிப்பிற்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது கல்வி நிறுவனம். உங்களின் பங்களிப்பினையும், ஆலோசனைகளையும் வருங்காலத்தில் நிச்சயம் பெற்றுக் கொள்ள விரும்புகிறோம் அந்த கடிதத்தில் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க : சர்வதேச அளவில் அஜித்தின் தக்ஷா அணிக்கு இரண்டாம் இடம்!
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டார்கள் மாநாட்டில் அஜித்தின் ஆலோசனைப்படி வடிவமைக்கப்பட்ட ஆளில்லா ஏர் டாக்ஸி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.