பேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுகவினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதி பேரணி சென்றனர்.
திமுகவை தோற்றுவித்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான அண்ணாவின் 49-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து, அண்ணா சதுக்கம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் திரளாக அமைதி பேரணி சென்றனர்.
அதன்பின், அண்ணா நினைவிடத்தில் ஏற்கனவே காத்திருந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரை முருகன் ஆகியோருடன் இணைந்து மு.க.ஸ்டாலின், பெரிய மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான திமுகவினர் ‘அண்ணா புகழ் ஓங்குக’, என முழக்கமிட்டனர்.
#Chennai: DMK Working President MK Stalin paid tribute to former TN CM and DMK leader CN Annadurai on his death anniversary. pic.twitter.com/rdz1CkdNOY
— ANI (@ANI) 3 February 2018