Advertisment

'பொய் சொல்வதில் தி.மு.க அமைச்சர்கள் இந்தியாவில் நம்பர் ஒன்': கோவையில் அண்ணாமலை

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார்கள். தற்போது ரூ.1000 கொடுக்கிறார்கள். கரும்பு கூட கொடுக்கவில்லை. திமுகவுக்கு 2024இல் மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.

author-image
WebDesk
New Update
Annamalai accused DMK ministers of lying

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் கு. அண்ணாமலை

கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கான மாநாடு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “2014இல் சமையல் எரிவாயு பயன்படுத்தினார்கள்.

இன்று, 67% மக்கள்தான் பயன்படுத்தினார்கள்,இன்று 99.30 மக்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது இறக்குமதி இரண்டு மடங்கு அதிகமாகிறது.

Advertisment

பொய் சொல்வதில் போட்டி வைத்தால் திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இந்தியாவில் நம்பர் ஒன்றாக வருவார்கள். காற்றாலை, சூரிய மின்சக்தி என யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

ஆனால் பி ஜி ஆர் போன்ற பிரைவேட் நிறுவனத்தை ஆதரிக்க விலை ஏற்றம் நடைபெற்றுள்ளது. இதனால் சாமானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில், ஒரு மெகா வாட்டுக்கு ரூ.20 லட்சம் கமிஷன் கேட்கின்றனர். பெயர் மாற்றத்திற்கு ரூ.10 லட்சம் வாங்குகின்றனர். இப்படி இருந்தால் எப்படி புது ஆள் சோலார் போடுவார்கள்” என்றார்.

மேலும், ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து பேசிய கு. அண்ணாமலை, அது மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு என விமர்சித்தார்.

தொடர்ந்து, “ராகுல் காந்தியின் நடைபயணத்தின் முடிவை நாம் தேர்தலில் பார்ப்போம். இந்தியாவைப் பிரிக்கக் கூடியவர்களை வைத்து சுற்றித் திரிகிறார்.

அவருக்கு அதுவொரு நல்ல உடற்பயிற்சி. இதனால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை” என்றார். இதையடுத்து, பொங்கல் தொகுப்பு குறித்து பேசிய அண்ணாமலை, “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார்கள்.

தற்போது ரூ.1000 கொடுக்கிறார்கள். கரும்பு கூட கொடுக்கவில்லை. 2024இல் மக்கள் திமுகவுக்கு முடிவுரை எழுதுவார்கள்” என்றார்.

மேலும், “இது பொங்கல் தொகுப்பு அல்ல, பொய் தொகுப்பு” என்றும் விமர்சித்தார்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment