Advertisment

டாஸ்மாக் வருமானத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை; அண்ணாமலை குற்றச்சாட்டு

'டாஸ்மாக் மதுவின் தரம் ஆய்வுக்கு உட்படுத்த படுகிறதா? என்பது கேள்விக்குறிதான். அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான். அமைச்சரே சட்டமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். அரசு வேலை செய்யவில்லை'

author-image
WebDesk
New Update
TN BJP Chief Annamalai suspects former NTK cadre sivaraman and his father death sexual assault case Tamil News

டாஸ்மாக் வருமானத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாஜகவின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் கோவை அவினாசி சாலை நீலாம்பூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

முன்னதாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில் கட்சியின் செயலாக்கத்தை ஆய்வு செய்து வருகிறோம். கோவையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளார். நான் வேட்பாளராக பங்கேற்க வந்துள்ளேன்.

6 சட்டமன்ற தொகுதியில் அனைத்து பொறுப்பாளர்களும் சந்தித்துள்ளோம். அடுத்த தேர்தலுக்கு தயாராவது, நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற நல்ல விஷயங்களை, தோல்வி கண்ட காரணத்தை ஆராய்ந்து செய்ய இந்த கூட்டம் நடத்த உள்ளோம்.

அடுத்து வரும் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும். சி.ஏ.ஜி. டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளது. டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும் சிரமம். அதனால் சி.ஏ.ஜி., அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அமைச்சர் துரைமுருகன் சொன்னதை சில பேர் நகைச்சுவையாக சொன்னாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது சிலரும் அதை சொன்னார்கள், தண்ணீர் போல் தான் இருப்பதாக சொன்னார்கள். டாஸ்மாக் போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்வதாக சொன்னார்கள். 

டாஸ்மாக் மதுவின் தரம் ஆய்வுக்கு உட்படுத்த படுகிறதா? என்பது கேள்விக்குறிதான். அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான். அமைச்சரே சட்டமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். அரசு வேலை செய்யவில்லை, அரசு தவறாக வேலை செய்கிறது என்று.

தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு  சிறப்பு ஊதியம் தமிழக அரசால் இன்னும் கொடுக்கவில்லை. கள்ளக்குறிச்சியில் ஓடிப்போய் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் போது மக்களுக்காக போராடும் காவல்துறைக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை கொடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

சென்னையில் சுகாதாரம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. அடிப்படை சுகாதாரம் அதளபாதாளத்தில் உள்ளது. இதைப்பற்றி சட்டமன்றத்தில் பேசுவதில்லை.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செய்வதில் தவறில்லை. துபாய், சிங்கப்பூர், போன்ற வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புகிறது.

பொதுமக்கள் வரிப்பணத்தில் செல்லும் முதலமைச்சர் பயணத்தால் மேற்கொண்ட லாபம் என்னவென்று கேட்டால், ஜீரோ தான். தமிழகத்தில் திறன் மிக்க நபர்கள் குறைந்து வருகின்றனர். பாடத்திட்டங்கள் முறையாக இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னை மரம், பணை மரம் மூலம் ஆண்டாண்டு காலமாக கள்ளுக்கடை இருந்தது. அதை கொண்டு வர சொல்கிறோம். படிப்படையாக டாஸ்மாக்கை குறைக்க சொல்கிறோம். அரசு நடத்தாமல் தனியாரிடம் நடத்த கேட்கிறோம். குஜராத், கேரளா மாநிலங்களைப் போன்று மது விற்பனை நடத்த சொல்கிறோம் என தெரிவித்தார்.

மேகதாதுவில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் அணைக்கட்ட முடியாது, சட்டம் உள்ளது. ஆனால், தொடர்ந்து அரசியலாக்க படுகிறது. என்னை போல் அணை கட்ட முடியாது என காங்கிரஸ் சொல்ல முடியுமா? காங்கிரஸ் எம்.எல்.,ஏ க்கள், மூத்த தலைவர்கள், எம். பி., க்கள் சீத்தாராமையாவை நேரடியாக சென்று ஏன் சந்திப்பதில்லை?

அனைத்து இடங்களிலும் தலைவர்கள் உள்ளனர். குறைவாக உள்ளனர். இன்னும் தலைவர்கள் வேண்டும் என்பது தான் விஜய் கருத்தாக இருக்கா முடியும். சென்னை ஜி.எஸ்.டி., சாலையில் கடைகள் அகற்றம் தொடர்பான கேள்விக்கு - கடை கட்டும் போது அதிகாரிகள் எங்கு சென்றார்கள்?  ஒருபுறம் அனுமதி வழங்குகிறார்கள்? மறுபுறம் இடிக்கிறார்கள் ? எந்த நாட்கள் நீதிமன்றம் செல்ல முடியாதோ சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் இதுபோன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.   ஆக்கிமிப்பில் கட்டும் போது வேடிக்கை பார்த்து வருகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் இதை பார்க்க வேண்டும்.

நீட் தேர்வு பொறுத்தவரை ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்க மறுக்கின்றனர்? உச்ச நீதிமன்றம் செல்ல மறுப்பது ஏன்? தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் கதவை தட்ட மறுக்கின்றனர். ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நாடகம் நடத்தி வருகின்றார்' எனத் தெரிவித்தார்.

Advertisment

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Coimbatore BJP Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment