தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, புதன்கிழமை (ஜூன் 14) அரியலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
அந்தக் குற்றச்சாட்டில் அமைச்சர் சிவசங்கர் 36 பேரின் பணி மாறுதலுக்கு ரூ.12 கோடி வாங்கியுள்ளார் எனத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பிய நிலையில் அடுத்து இந்த அமைச்சர்தான் என ஓபனாக கூறினார்.
தொடர்ந்து, “தி.மு.க. பயத்தில் நடுக்கத்தில் உள்ளது” என்றும் அண்ணாமலை விமர்சித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நெஞ்சு வலி காரணமாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
அவரை காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் அவரும் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 15) விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“