scorecardresearch

ஓபிஎஸ் இல்லாத அதிமுக-வை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலை பதில்

ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை பாஜக ஏற்றுகொள்ளுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை, அதிமுக தொண்டர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ் இல்லாத அதிமுக-வை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலை பதில்

ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை பாஜக ஏற்றுகொள்ளுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை, அதிமுக தொண்டர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருடன் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார். இந்நிலையில் பிரதமரை எடப்பாடி பழசாமி சந்திப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

திரெளபதி முர்மு இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வில் எடப்பாடி பழசாமி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அமித்ஷாவை சந்திக்க, வாய்ப்பு கிடைக்காததால் அவர் சென்னைக்கு திரும்புயுள்ளார் என்று எடப்பாடி பழசாமியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் பிரதமர் சென்னை வரும்போது, அவருடன் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். இந்நிலையில் ”அதிமுகவின் தலைவராக எடப்பாடி பழசாமியை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டோம்.  உள்கட்சி விவகாரத்தை பிரதமரிடம் விவாதிக்க வேண்டிய தேவையில்லை” என்று அவர் கூறியுள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Annamalai answer for admk without ops