அன்னபூர்ணா அதிபர் - நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோ வெளியீடு: மன்னிப்பு கோரிய அண்ணாமலை

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்ட வீடியோவை பகிர்ந்ததற்காக, எக்ஸ் தளத்தின் வாயிலாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார்.

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்ட வீடியோவை பகிர்ந்ததற்காக, எக்ஸ் தளத்தின் வாயிலாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai apologises after BJP leader shares video of Coimbatore Annapoorna Owner Srinivasan meeting with Nirmala Sitharaman Tamil News

நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பா.ஜ.க-வினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர் பேசும்போது, 'இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பன்னுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பன் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும்' என்று கூறி கோரிக்கை வைத்தார். 

Advertisment

இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகியது. இதையடுத்து, நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டதற்கு மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பா.ஜ.க-வினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், வணிக உரிமையாளருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தனிப்பட்ட சந்திப்பை பாஜகவினர் வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்." என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Nirmala Sitharaman Annamalai Tamilnadu Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: