கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது, “திமுக எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய வேண்டும்” என்றார்.
Advertisment
தொடர்ந்து அவர் பேசுகையில், “அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் செந்தில் பாலாஜி. அவருககாக திமுக அரசு இயந்திரம் செயல்படுகிறது. அவருக்காக ஓடோடி செல்கின்றனர். மேலும் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக கூறி களவாணிகள் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
காவிரி நதிநீரை தர மாட்டேன் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். அப்படியிருக்க மு.க. ஸ்டாலின் அங்கு எதற்காக செல்ல வேண்டும். 2004ல் மன்மோகன் சிங்கை அமர வைத்து அவரது அமைச்சரவையை கூறுபோட்டார்கள். ஆனால் 2024ல் அப்படி நடக்காது.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தது போன்று திமுக எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைய வேண்டும். பொதுசிவில் சட்டம் வேண்டும் என அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். 2026ல் மதுரையில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும். புதிய பாராளுமன்றத்தின் முன்பு வணங்கிய அமைச்சர் மனோ தங்கராஜை கடலில் கட்டிப் போட்டாலும் கடல் ஏற்றுக் கொள்ளாது” என்றார்.
மதுரையில் வேளாண்மை பல்கலைக்கழகம் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னானது எனக் கூறி செங்கலை எடுத்துக் காட்டினார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“