scorecardresearch

அமைச்சர் பி.டி.ஆர் வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன்: அண்ணாமலை சவால்

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோக்கள் போலியானது என்று மறுக்கப்பட்ட நிலையில், பி.டி.ஆர் வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

Annamalai Challenge, annamalai says if PTR Palanivel Thiagarajan case filed he will submit original audio, அமைச்சர் பி.டி.ஆர் வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன், அண்ணாமலை சவால், பாஜக, Annamalai, PTR Palanivel Thiagarajan, dmk, ptr audio
அண்ணாமலை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோக்கள் போலியானது என்று மறுக்கப்பட்ட நிலையில், பி.டி.ஆர் வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தி.மு.க-வில் உதயநிதி, சபரீசன் சொத்து குவிப்பு குறித்து பேசியதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த ஆடியோ போலியானது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆடியோ தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சென்னை நடுக்குப்பத்தில் நடைபெற்ற மனதின் குரல் திரையிடல் நிகழ்ச்சியில், மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாடு குறித்து பேசிய கருத்துகளை அண்ணாமலை புத்தகமாக வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது; “இதுவரை நடைபெற்ற 99 மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும், பிரதமர் மோடி தமிழர்களுக்கு மிக முக்கிய இடத்தை கொடுத்துள்ளார்.

100-வது நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியுள்ளார். தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையை எப்படி வாக்குகளாக மாற்றுவது என்பதுதான் எங்களின் நோக்கம்.

தமிழ்நாட்டில் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க-தான். ஆனால், கூட்டணியின் முகம் மோடிதான். ஊழலுக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன்.” என்று அண்ணாமலை கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Annamalai challenge if ptr palanivel thiagarajan case filed he will submit original audio